முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகன் மேல் பாய்ந்த புதிய வழக்குகள்.!

முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகன் மேல் பாய்ந்த புதிய வழக்குகள்.!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான துரைமுருகன் மேல் கார் ஷோரூம் உரிமையாளரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த கார் ஷோரூம் உரிமையாளர் வினோத். இவர் திமுக உறுப்பினராக இருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வினோத்தின் ஷோரூமுக்கு சென்ற சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான துரைமுருகன் மற்றும் 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வினோத்தை மிரட்டி பிரபாகரன் வீடியோ பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வைத்து அதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யவைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கார் ஷோரூம் உரிமையாளர் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நான்கு பேரை நேற்று கைது செய்தனர். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராஜசேகர்  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோரின் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும்,மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும், இதன் காரணமாக சாட்டை துரைமுருகன் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சாட்டை துரைமுருகன் மீது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும்,மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.