நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.! பாஜக எல்.முருகன் பேச்சு.! 

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.! பாஜக எல்.முருகன் பேச்சு.! 

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும் ஆனாலும் மக்களையும், மாணவர்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்கிறது பாஜக மாநில தலைவர்  எல்.முருகன்  குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகபாஜக விவசாய அணி சார்பில் சென்னை தி. நகரில் உள்ள  கமலாலயத்தில் மாநில தலைவர் எல்.முருகன்  1 லட்சம் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "புதிய தமிழக அரசு ஆட்சி அமைத்து 30 நாட்கள் கடந்துவிட்டது பல தாய்மார்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வருகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் மாதம் 1000 கொடுக்கிறேன் என்று கூறினார்கள். ஆனால் அதனை தற்போது வரை கொடுக்கவில்லை. எனவே தேர்தல் அறிக்கையில் கூறிய தொகை உடனடியாக கொடுக்க வேண்டும்" எனக் 
கூறினார்.

மேலும் "நீட் விவகாரத்தில் மாணவர்களை குழப்பக் கூடாது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.நீட் விவகாரத்தில் 7.5 % இட ஒதுக்கீடு அமைத்து நிறைய குழந்தைகள் மருத்துவ படிப்பை பெற்றுள்ளனர். அவர்கள் யாரும் படிக்க வர கூடாது என திமுக நினைக்கிறது. மாணவர்கள் மனதை குழப்பும் செயலை தான் திமுக செய்து வருகிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் செயலை திமுக செய்ய வேண்டாம்.திமுக என்றாலே மக்களை ஏமாற்றுவது தான்" எனகுற்றம் சாட்டினார். ,

தொடர்ந்து பேசிய அவர் "நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும் ஆனாலும் மக்களையும், மாணவர்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்கிறது என அவர் குற்றம் சாட்டினார். இந்து கோயிகளில் நிலங்களை அரசு மீட்டு வருகிறது?பாரபட்சம் இன்றி அனைத்து கோயில் சொத்துக்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும்."