விஞ்ஞானியையே ஏமாற்றிய கில்லாடி: ரூ.12 லட்சம் அபேஸ்!

கன்னியாகுமரி அருகே ஓய்வு பெற்ற  விஞ்ஞானியை செல்போனில் அழைத்த மர்மநபர் நூதனமுறையில் 12 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங், இவர் தேசிய வானூர்தி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லலிதா, இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் . இந்நிலையில் பாலாசிங் வீட்டு தொலைபேசியில் அழைத்த மர்மநபர் ஒருவர், தான் வங்கியிலிருந்து பேசுகிறேன் என்றும் உங்களது ஏ.டி,எம் காலாவதியாகிவிட்டது என கூறியுள்ளார்.  இதனை உண்மை என நம்பிய பாலாசிங் புதிய ஏடிஎம் அட்டை வழங்குவதாக கூறிய மர்மநபரிடம் ஏடிஎம் அட்டையின் இரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்துள்ளார்.

பின்னர் சந்தேகமடைந்த பாலாசிங் வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்குகளை சரிபார்த்துள்ளார். அதில் வங்கி கணக்கிலிருந்து 12 லட்சம் ரூபாய் பறிபோனது தெரியவந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து வங்கி பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்