இன்னும் இரண்டு நாளுக்கான தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ளது.! சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேதனை.! 

 இன்னும் இரண்டு நாளுக்கான தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ளது.! சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேதனை.! 

கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் கொரோனா பாதிப்பு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நடத்தினார்.

அந்த ஆய்வுக்கூட்டத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் தடுப்பூசி உள்ளது என்றும், மத்திய அரசிடம் இருந்து வந்தால் தான் அடுத்த கட்டமாக தடுப்பூசி செலுத்த முடியும் எனத் தெரிவித்தார். மேலும்  3. 50 கோடி தடுப்பூசி பெற தமிழக அரசு கோரியுள்ள உலகளாவிய  ஒப்பந்த புள்ளிகள் பற்றிய விவரம் ஜூன் 5ம் தேதிக்கு பின்னரே தெரியும் என்றும், அதன்பின்னர் தான் எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்பது குறித்து தெரிய வரும்  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். .