எங்கள் ஆட்சி தொடர்ந்திருந்தால் மதுரையை வேறு மாதிரி மாற்றியிருப்போம்.! செல்லூர் ராஜு வருத்தம்.! 

எங்கள் ஆட்சி தொடர்ந்திருந்தால் மதுரையை வேறு மாதிரி மாற்றியிருப்போம்.! செல்லூர் ராஜு வருத்தம்.! 

மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுபுற கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகைப்பொருட்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.


அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் வணிக வரித்துறை அமைச்சர் டிரான்ஸ்பார்மருக்கு மாலை போட்டு திறந்து வைப்பது சற்று தூக்கலாக தெரிகிறது என்றும், மதுரையின் இரண்டு அமைச்சர்களில் வணிகவரித்துறை அமைச்சர் சிறப்பாக பணி செய்கிறார் என்றும், எங்கள் ஆட்சி தற்போதும் தொடர்ந்திருந்தால் மதுரையை வேறு மாதிரி மாற்றியிருப்போம் என்றும் கூறினார். 

 
மேலும் சசிகலா தொலைபேசி உரையாடலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற அவர்  இருபெரும் தலைமையில் கட்சி சென்று கொண்டுள்ளது. எங்களுடைய பொதுக்குழு, செயற்குழு கூடி கட்சி விவகாரங்களை பற்றி முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர் தமிழ் கலாச்சாரத்தையும் இலக்கியத்தை எந்தப்பிரதமரும் பேசியதில்லை என்றும், தமிழை பற்றி பேசும் நம்முடைய நல்ல பிரதமர் மோடி என்றும் கூறினார், அதோடு அவரை சந்தித்து முதல்வர் அதிகளவில் தடுப்பூசிகளை பெறுவார் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார். 


அதன்பின் கூட்டுறவுத் துறை விவாகம் பற்றி பேசிய அவர் ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தான் என்ற ரீதியில் கட்சியை ஆட்சியை நடத்தினோம் என்ற அவர், கட்சியிலும் தவறு செய்தவர்கள் மீது அந்த அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்,கூட்டுறவுத்துறை முறைகேடு குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தயார் எனவும் தெரிவித்தார்.