விவசாயத்துக்கு தனி பட்ஜெட்..? இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தும் தமிழக அரசு.! 

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்..? இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தும் தமிழக அரசு.! 

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருப்பது விவசாயத் துறை தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த துறையை இந்தியாவின் 50% மக்கள் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் கடந்தசில ஆண்டுகளாக தொழிற்துறையில் வளர்ச்சி காரணமாக விவசாயத் துறைக்காக அரசின் கவனம் பல மடங்கு குறைந்துள்ளது. 


தமிழகத்தை பொறுத்தவரை திமுக தனது தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு முன் திமுக ஆட்சியில் உழவர் சந்தைகள் போன்றவை தொடங்கப்பட்டு அது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல சில திட்டங்கள் இந்த முறையும் வெளியிடப்படும் என்று கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை அப்படி தமிழக அரசு விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தால் இந்தியாவில் முதல் முறையாக விவசாயத் துறைக்குத் தனிப் பட்ஜெட் அறிவித்த முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெரும். 

ஒருவேளை அப்படி விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் அதை யார் அறிவிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நிதியமைச்சரே அறிவிப்பார் என்றும் இல்லை ஒன்றிய ரயில்வே பட்ஜெட்டைப் போல வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பார் என்றும் இருவிதமான கருத்துக்கள் கூறப்படுகிறது.