இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்... 15-ம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும்

ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இரண்டாயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்... 15-ம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும்
Published on
Updated on
1 min read

ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இரண்டாயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா நிவாரணமாக நான்காயிரம் ரூபாய் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் 2-வது முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 15-ந் தேதி முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இரண்டாயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. அரிசி கார்டு வைத்துள்ள 2 கோடியே 11 லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைய உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com