பிஎஸ்பிபி ஆசிரியர் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது... சங்கர் ஜிவால் பரபரப்பு பேட்டி!!

பிஎஸ்பிபி ஆசிரியர் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது... சங்கர் ஜிவால் பரபரப்பு பேட்டி!!

பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆயுதப்படை தலைமை காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தும் அதிரடியாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும், பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் கோபாலன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், 
இதுபோன்ற புகார்களில் பாதிக்கப்பட்டிருந்தால் முன்வந்து தகவல் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இருவர் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

அதுமட்டுமல்லாது சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், . ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் கூறியுள்ளார். 

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.