பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்.. என்னாச்சு அங்க?!

பாம்பன் பாலத்தில் மரச்செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்படும் அபாயத்தில் உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்.. என்னாச்சு அங்க?!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல்மீது அமைந்துள்ள பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால், பாம்பன் பாலம் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் பாலத்தின் நடைபாதையில் பல இடங்களில் மரச்செடிகள் வளர்ந்துள்ளது. இச்செடிகளை அகற்றாவிடில் நடைபாதை, தடுப்பு சுவரில் வேர் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு, பாலம் பலவீனமாகும் அபாயம் உள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கு பின் பாலத்தில் நின்று கடல் அழகை வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்கு விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், செடிகளை அகற்றி பாலத்தின் உறுதி தன்மையை பரமாரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.