2-வது கொரோனா நிவாரண உதவித்தொகைக்கான டோக்கன் வாங்க வந்த மூதாட்டியை தாக்கிய ரேஷன் கடை ஊழியர் ...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 2-வது கொரோனா நிவாரண உதவித்தொகைக்கான டோக்கனை பெற வந்த மூதாட்டியை நியாய விலை கடை ஊழியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2-வது கொரோனா நிவாரண உதவித்தொகைக்கான டோக்கன் வாங்க வந்த மூதாட்டியை தாக்கிய ரேஷன் கடை ஊழியர் ...

காரைக்குடி அருகேயுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் அரசு அறிவித்த கொரோனா உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாய் கடந்த மாதம்  வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட 14 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தைப்பேட்டை பகுதியில் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2-வது தவணை நிவாரண உதவி தொகைக்கான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சந்தைப்பேட்டை பகுதியில் நியாயவிலைக் கடையிலேயே வழங்கப்பட்டதால், டோக்கனை வாங்க பொதுமக்கள் திரண்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதனால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே டோக்கன் வாங்க வந்த மூதாட்டி ஒருவரை நியாய விலைக் கடை ஊழியர் தாக்கிய சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.