9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு...

9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு...

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிகழ்வாண்டிற்கான சேர்க்கை 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை வகுக்க, குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. அண்ணாமலை, பெரியார், காமராஜ் பல்கலைக்கழகங்களின் முறைகேடு பற்றி விசாரிக்க ஐ.ஏ. எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.