மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் : இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் : இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உயர் நீதிமன்றம தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.