12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை அவசர ஆலோசனை!!

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எப்போது நடத்துவது, அதில் எவ்வாறு மாற்றங்கள் செய்வது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை அவசர ஆலோசனை!!

கொரோனா வைரஸ் தொற்று 2 வது அலை இந்தியாவை சூறையாடிக்கொண்டிருப்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது நடந்தது இந்த கூட்டத்தில், கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யவிருப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை அவசர ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த கூட்டத்தில், முதல்வரின் செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவசர ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.