கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாமே... யோசனை கூறிய உயர்நீதிமன்றம்!!

கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாமே... யோசனை கூறிய உயர்நீதிமன்றம்!!

முன்களப்பணியாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கலாமே என சென்னை உயர்நீதிமன்றம், மாநில அரசுக்கு யோசனை வழங்கியுள்ளது. 

முன் களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், இது கொள்கை முடிவு தொடர்புடையது என்பதால் அரசு தான் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர் ஆகியோர் உயிரிழக்கும்போது இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்கலாம் என மாநில அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.

ஊரடங்கின்போது நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது என்று தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் மத்திய அரசு தான் முடிவெடுக்க  வேண்டும் எனவும்  கூறி வழக்கை முடித்துவைத்தது.