இறந்துவிட்டதாக சொன்ன சாமியார்.... திடீரென கமிஷனர் ஆபிஸில் அவதரித்ததால் பரபரப்பு

தன்னை அடக்கம் செய்ய பண வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாடக நடிகர் மங்களநாத குருக்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இறந்துவிட்டதாக சொன்ன சாமியார்.... திடீரென கமிஷனர் ஆபிஸில் அவதரித்ததால் பரபரப்பு

தான் இறந்து விட்டதாகக் கூறி தன்னை அடக்கம் செய்ய பண வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாடக நடிகர் மங்களநாத குருக்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் நடித்து வரும் மங்களநாத குருக்கள் புகார் ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

முகநூலில் நேற்று முதல் தானும் தனது குடும்பத்தாரும் கொரோனா தொற்றால் இறந்துவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவிவருவதாக தெரிவித்தார். மேலும், அந்த வதந்தியை பரப்பியவர்கள் அடக்கம் செய்ய பணமில்லை என்றுக் கூறி தலைக்கு 2,500 ரூபாய் வசூல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் மீது அன்புகொண்ட பலர் இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் தனக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த வதந்தியால் தானும் தனது குடும்பத்தாரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறிய அவர், இதுபோன்ற வதந்திகளை பரப்பி பணம் சம்பாதிக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். காவல் துறையினர் உரிய நடவடிக்கை விசாரித்து எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.