தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் வேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி...

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு தடுப்பூசி வருகை அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும் பணி மீண்டும் வேகமெடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் வேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி...

தமிழகத்திற்கு இதுவரை  மத்திய அரசு ஒதுகிகீட்டின் கீழ் 88 லட்சத்து 53 ஆயிரத்து 690 தடுப்பூசிகளும், தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் கீழ் 17 லட்சத்து  76 ஆயிரத்து 270 தடுப்பூசிகளும் வந்துள்ளன.   அதில் 98 லட்சத்து 4 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் கொரொனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியதால் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி போடும் பணி முற்றிலும் பாதிக்கப்பபட்டது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக தடுப்பூசி மையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் ஆர்வமுடன் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசியும் நேற்று 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும் வந்தடைந்தன. இவை அனைத்து மாவட்டங்களும் பிரித்து அனுப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று கூடுதலாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 270 கோவாக்சின் தடுப்பூசி வந்தடைந்துள்ளது. மேலும்  3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை வர உள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி  போடும் பணி மீண்டும் வேகமெடுத்துள்ளது.

ஒசூரில் 7 நாட்களுக்கு பிறகு 44 வயதிற்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இன்று செலுத்தப்படுவதால் டோக்கன்களை பெற நீண்ட வரிசையில்  பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.  காலை  5 மணி முதல் மக்கள் காத்திருந்து டெக்கனை பெற்று வருகின்றனர். 500 பேருக்கு மட்டுமே  இன்று டோக்கன்  வழங்கப்படும் என்பதால் பலர் ஏமாற்றுடத்துடன் திரும்பி சென்றுள்ளனர். 

இதேபோல் மதுரையிலும்  கடந்த மூன்று நாட்களாக வெறிச்சோடி கிடந்த தடுப்பூசி மையங்களில் இன்று மீண்டும் தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் காலை முதல் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு செல்கின்றனர்.