வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு

சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு

சென்னை மயிலாப்பூரில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கொரோன விழுப்புணர்வு கையேடு புத்தகத்தை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி சார்பில் இந்தியாவிலேயே வேறெங்குமில்லாத வகையில் சென்னையில்  விழிப்புணர்வு கையேடு வீடு வீடாக செல்லும் களப்பணியாளர்கள் மூலமாக அனைவருக்கும் அளிக்கப்படும் என்றார்.

7மாவட்டங்களை தவிர்த்து பிறமாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதாக என கூறிய அமைச்சர்,கொரோனாவை எதிர்கொள்ள தேவையான வெண்டிலேட்டர்,ஆக்சிஜன்,படுக்கை வசதிகளை அரசு சரி செய்து தயாராக வைத்துள்ளதாக தெரிவித்தார்.மூன்றாம் அலையையும் சரியாக கையாண்டு  தமிழ்நாடு அரசு சமாளிக்கும் என்றும்,சென்னை 2. 0 வேலையை ஆரம்பித்துவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.