14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் - நாளை முதல் டோக்கன் விநியோகம்...

ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படுகிறது. 

14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்  -  நாளை முதல் டோக்கன் விநியோகம்...

கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாயை வழங்கினார். இதையடுத்து  2-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இதைதொடர்ந்து கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக நாளை முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.  ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று ரே‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 15-ந் தேதி முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், 2 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. இதனால் ரேஷன் கார்டு வைத்துள்ள 2 கோடியே 11  லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைவர்.