டோனியை பற்றி இரண்டு வரில சொல்லுங்க! இணையத்தில் வைரல் ஆகும் விராட் கோலி பதில்...

டோனியை பற்றி இரண்டு வரில சொல்லுங்க!  இணையத்தில் வைரல் ஆகும் விராட் கோலி பதில்...

தோனியை பற்றி இரண்டே சொற்களில் விவரிக்குமாறு விராட் கோலியிடம் ரசிகர் ஒருவர் அன்பு வேண்டுகோள் விடுக்க, அதற்கு விராட் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இணையம் வழியாக தனது ரசிகர்களுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது கோலியிடம் ஏராளமான ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்ப, அதில் ஒருவர், தோனியை பற்றி இரண்டே சொற்களில் விவரிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தார். தோனியை அவரது ரசிகர்கள் பொதுவாக கேப்டன் கூல் என செல்லமாக அழைப்பர். இந்த நிலையில் விராட், தோனியை பற்றி என்ன சொல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க “நம்பிக்கை, மரியாதை” என இரண்டே சொற்களில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் விராட். அவரது இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.