இரண்டு முன்னணி வீரர்களுக்கு கொரோனா தொற்று : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்வது சந்தேகம்...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவிருந்த இரண்டு முன்னணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு முன்னணி வீரர்களுக்கு கொரோனா தொற்று : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்  தொடர்வது சந்தேகம்...

உலகில் அதிகளவில் ரசிகர்களை கொண்ட பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிகோலா மெட்கிக் மற்றும் மேட் பெவிக் ஆகிய இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இருவரையும் தொடரில் இருந்து வெளியேற்றுவதாக பிரெஞ்ச் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இதுவரை 2 ஆயிரத்து 446 பேருக்கு தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள் ளதாகவும், இந்த தொடரில் முதல்முறையாக இரண்டு வீரர்கள் நோய் தொற்று காரணமாக நீக்கப்படுவதாகவும் பிரெஞ்ச் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.