நாங்க லண்டனுக்கு போறோம்: சொல்வது யார் தெரியுமா?

நாங்க லண்டனுக்கு போறோம்: சொல்வது யார் தெரியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 5 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெறுகிறது. இதில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.  

இந்த போட்டியில் விளையாடுவதற்காகவும், இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுவதற்காகவும் இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. நாளை சவுத்தம்டன் சென்றடையும் இந்திய வீரர்கள் அங்குள்ள ஓட்டலில் தனிமைப் படுத்தப்படுவார்கள்.  இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும்.

நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்து விட்டது. அந்த அணி உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 டெஸ்டில் ஆடுகிறது. முதல் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில் ஆடிய பிறகு வீராட் கோலி அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.