ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி...

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி...

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் குவைத்தின் நாடிர் ஒடாக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்த ஷிவதபா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5ஆவது முறையாக பதக்கம் வெல்கிறார். அதேபோல் நடப்பு சாம்பியன் அமித் பன்ஹால், விகாஷ் கிருஷ்ணன், சஞ்சீத் மற்றும் வரிந்தர் சிங் ஆகிய இந்திய வீரர்களும் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.

பெண்கள் பிரிவினல் சாக்‌ஷி, ஜாஸ்மின் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் ஆகியோரும் அரையிறுதியை எட்டியதால், 3 பேருக்கும் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது. மேலும், 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், லால்பாட் சாய்ஹி, லவ்லினா, பூஜா ராணி, மோனிகா, சவீட்டி, அனுபமா ஆகிய இந்திய வீராங்கனைகள் நேரடியாக அரையிறுதியில் களம் இறங்குவதால், அவர்களுக்கும் நிச்சயம் பதக்கம் உண்டு. எனவே, இந்தியாவிற்கு மொத்தம் 15 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.