குஜராத் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் செஞ்சியில் பறிமுதல்...

குஜராத் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் செஞ்சியில் பறிமுதல்...

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குஜராத் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட எல்லையான செஞ்சியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியே கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று வந்தது. அந்த வாகன ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்தனர்.  
 
அப்போது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 573 கேன்களில், சுமார்  60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாரியுடன் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுநர் முகமது இக்ராம் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் எரிசாராயம் குஜராத் மாநிலத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு கடத்திச் செல்லபட்டது தெரிய வந்தது.  இதனிடையே கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.