நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44-வது GST கவுன்சில் கூட்டம்!

44 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று  நடைபெற உள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44-வது GST கவுன்சில் கூட்டம்!

காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் மத்திய நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.  

அதேபோல், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நிதித்துறை அமைச்சர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

இந்த காணொளி கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநில நிதித்துறைச் செயலாளர் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அதேபோல், கடைசியாக கடந்த மே மாதம் 28- ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான பிபிஇ கிட், முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக, மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், இன்று  நடைபெற உள்ள கூட்டத்தில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.