நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 156 பேர் மாயமானதால் மீட்பு பணிகள் தீவிரம்...

நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில்  156 பேர் மாயமானதால் மீட்பு பணிகள் தீவிரம்...

நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 156 பேரை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர் 

நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தில் இருந்து 180 பயணிகளுடன் நைஜர் மாநிலத்தின் மலேலே நகருக்குச் சென்று கொண்டிருந்த படகு, திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி உயிரிழந்த  4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், காணாமல் போன 156 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. பழைய மற்றும் பலவீனமான அந்த படகில், அதிக அளவில் பயணிகள் பயணித்ததோடு, 30 மோட்டார் சைக்கிள்களும் ஏற்றப்பட்டிருந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் காணாமல்போன 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.