அச்சுறுத்தும் யாஷ் புயல்.! தென்மாவட்டங்களுக்கு செல்லும் இந்த இரயில்களும் ரத்து.!

அச்சுறுத்தும் யாஷ் புயல்.! தென்மாவட்டங்களுக்கு செல்லும் இந்த இரயில்களும் ரத்து.!

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ் புயல் காரணமாக 22 சிறப்பு இரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக, தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை யாஷ் புயலாக உருமாறியது. இதன் காரணமாக தென்மாநிலங்களில் பல பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது. இன்னும் வரும்நாட்களில் தென்மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் காரணமாக 22 சிறப்பு இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக நாகர்கோவில்-ஷாலிமார் இடையேயான சிறப்பு இரயில் மே 23-ம் தேதியும், ஷாலிமார் -நாகர்கோவில் இடையேயான சிறப்பு இரயில் மே 26-ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு இரயில் மே 24-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல சென்னை-ஹவுரா இடையிலான சிறப்பு இரயில்கள், மே 24 முதல் 26-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மே 25-ம் தேதி ஷாலிமார்-திருவனந்தபுரம் மற்றும் திருச்சி-ஹவுரா சிறப்பு இரயில் ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ள தெற்கு இரயில்வே, மே 27-ம் தேதி சந்திராகாசி-சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் ரத்து செய்யப்படுகிறது என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.