இனி அரசு ஆசிரியர்களுக்கு ஒரே குஷி தான்.! - TET தேர்வில் அரசு அதிரடி உத்தரவு.! 

இனி அரசு ஆசிரியர்களுக்கு ஒரே குஷி தான்.! - TET தேர்வில் அரசு அதிரடி உத்தரவு.! 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் என்ற தகுதியை பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வு தான் TET. இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் இவர்களுக்கு வழங்க கூடிய தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  

2011-ம் ஆண்டிலிருந்து தேர்ச்சி பெற்று, அவர்களது சான்றிதழ் காலாவதியாகி இருந்தாலும், இனி ஆயுள் முழுவதும்  பயன்படுத்த முடியும். மேலும், கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த  முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.