123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகம் செய்துள்ளோம்... பெருமை பாராட்டும் இந்தியா!!

123 நட்பு  நாடுகளுக்கு  மருந்து விநியோகம் செய்துள்ளோம்... பெருமை பாராட்டும் இந்தியா!!

இந்தியா 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகம் செய்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார்.

அமைப்பு சாரா நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.

அதில் கொரோனா சூழலில் இந்தியாவுக்கான தேவை அதிகமாக இருந்தபோதும், 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகத்தை உறுதி செய்துள்ளோம் என்றும் அதில் 59 நாடுகள் அமைப்பு சாராத நாடுகளாகும் என கூறினார்.

மேலும் உலக அளவிலான கொரோனா தொற்று சாா்ந்த பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி நடவடிக்கைகளில் இந்தியா மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.