நிலையான வளர்ச்சி,..இரண்டாம் இடத்தை பிடித்த தமிழ்நாடு,.. முதல், கடைசி இடங்கள் யாருக்கு தெரியுமா? 

நிலையான வளர்ச்சி,..இரண்டாம் இடத்தை பிடித்த தமிழ்நாடு,.. முதல், கடைசி இடங்கள் யாருக்கு தெரியுமா? 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நிலையான வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதல் இடம் பிடித்துள்ளது.தமிழ்நாடு இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 

உலகம் முழுக்க ஐநா அமைப்பில் உள்ள நாடுகளில் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் அமைப்பான Sustainable Development Goals எனப்படும் வளர்ச்சி கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு உலகெங்கும் இருக்கும் நாடுகளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இது நிதி ஆயோக்கோடு இணைந்து இந்தியாவின் இந்த கணக்கீடை எடுத்து வருகிறது.  

இந்த அமைப்பு பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பாலின சமநிலை உள்ளிட்ட 16 தலைப்புகளில் 115 பணிகளில் சிறந்து விளங்கும் மாநிங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள், எவ்வளவு கல்வி கொண்டு உள்ளனர், எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களின் சுகாதார மருத்துவ வசதி எவ்வளவு பூர்த்தி செய்யப்படுகிறது என்பதை முதன்மை அளவுகோலாக வைக்கிறது. 

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவிலேயே நிலையான வளர்ச்சி பெரும் மாநிலங்களில் 75 புள்ளிகளுடன் முதல் இடத்தை கேரளம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் கேரளமே முதல் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து 74 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதற் புள்ளியை பெற்று இமாச்சல பிரதேசமும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த வரிசையில் கடைசி நான்கு இடங்களை  உத்தரபிரதேசம்,அசாம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய வடக்கு மாநிலங்கள் பிடித்துள்ளது.