மிக குறைந்த பாலின விகிதம் கொண்ட மாநிலம் உத்தரகாண்ட்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாட்டிலேயே மிக குறைந்த பாலின விகிதம் கொண்ட மாநிலங்களில் உத்தரகாண்ட் முதலிடத்தை பிடித்துள்ளது.

மிக குறைந்த பாலின விகிதம் கொண்ட மாநிலம் உத்தரகாண்ட்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அங்கு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 840 பெண் குழந்தைகளே பிறப்பதாக நிதிஆயோக் அமைப்பின் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின விகிதத்தில் சிறந்த மாநிலமாக சத்தீஸ்கர் உள்ளது. அங்கு பாலின விகிதம் 958 ஆக உள்ளது. 957 பாலின விகிதங்களுடன் கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளது. பாலின விகிதத்தில் மிக குறைந்து காணப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஹரியானாவில் ஆயிரம் ஆண்களுக்கு 843 பெண்களும், பஞ்சாபில் இந்த எண்ணிக்கை 890 ஆகவும் உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, 75 மதிப்பெண்களுடன் கேரளா முதலிடத்திலும், 52 மதிப்பெண்களுடன் பீகார் மிக மோசம் என்ற இடத்தையும் பிடித்துள்ளது. இதனிடையே பாலின விகிதத்தில் தேசிய சராசரி 899 ஆக் உள்ளது குறிப்பிடதக்கது.