சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்த ஜே.என்.யு..!!

சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதன்முதலாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.

சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்த ஜே.என்.யு..!!

அண்மையில் வெளியான சிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், மும்பை ஐஐடி 117 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் இந்நிறுவனம் 5 இடங்கள் பின்தங்கி இருந்தாலும், தொடர்ந்து 4வது முறையாக இந்திய அளவில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

இதேபோல் டெல்லி ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி,  மெட்ராஸ் ஐஐடி, கான்பூர் ஐஐடி என 22 இந்திய கல்வி நிறுவனங்கள் இந்த முறை சர்வதேச அளவிலான டாப் 1000 பல்கலைக்கழகப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இதில் டெல்லியில் உள்ள ஜேஎன்யு முதன்முறையாக 561 முதல் 570 வரையிலான ரேங்க் பேண்டில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த தரவரிசை, கல்விதரத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என சில கல்வி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.