கொரோனா பாதித்தவர்களுக்கு குறையும் செவிதிறன்.... மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது கேட்கும் திறன் குறைவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

கொரோனா பாதித்தவர்களுக்கு குறையும் செவிதிறன்.... மருத்துவர்கள் அதிர்ச்சி

 கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது கேட்கும் திறன் குறைவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. முழு ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள், தடுப்பூசி என கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது கேட்கும் திறன் குறைவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்தது. குறிப்பாக கொரோனா பாதிப்பும் சரி, உயிரிழப்புகளும் சரி முதல் அலையை விட இரண்டாம் அலையில் படுமோசமாக இருக்கிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். தற்போது, மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தலைநகர் டெல்லியைச் சேர்ந்த சவுரப் நாராயண் என்ற மருத்துவர் கடந்த ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் கொரோனாவி்ல இருந்து குணமடைந்த நிலையில், அதன் பிறகு அவரது செவித்திறன் குறைந்துள்ளதை அவர் உணர்ந்தார். ஆனால், இதை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டதால், அவருக்குச் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோன்று 15 பேருக்கு நடந்துள்ளதாக டெல்லியிலுள்ள அம்பேத்கர் மருத்துவமனை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.