மஹாராஷ்ட்ராவில் ஊரடங்கு நீட்டிப்பு: தொற்றை குறைக்க நடவடிக்கை

மஹாராஷ்ட்ராவில் ஊரடங்கு நீட்டிப்பு: தொற்றை குறைக்க நடவடிக்கை

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.


கொரோனா வைரசின் 2-ம் அலை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சற்று குறையதொடங்கியுள்ளது. இதனிடையே அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வந்தாலும் அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்கள் நிட்டிக்கப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.   

இதுகுறித்து பேசிய முதலைமைச்சர், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 92 சதவீதமாக அதிகரித்திருப்பது நல்ல அறிகுறி என்றும் நகரங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் அதே வேளையில் கிராமங்களில் தொற்று அதிகரித்து வருவதாக கூறினார்.

கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் இருப்பினும் சிறார்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கூறுவதாக தெரிவித்தார். நம் மூலமாக கூட குழந்தைகளுக்கு தொற்று ஏற்படலாம் எனவே நாம் அவர்களை முறையாக கவனித்து கொள்ள வேண்டும் என்றார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஊரடங்கு உதவியாக இருந்திருக்கிறது. அதேவேளையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என கூறினார். மேலும் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.