குழந்தை தத்தெடுப்பு: தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கொரோனா தொற்றால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குழந்தை தத்தெடுப்பு: தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கொரோனா தொற்றால் அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 107 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அரசு காப்பகங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, கொரோனாவால் பெற்றோரை இழந்து அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை வைத்து தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதிபெறுவதையும், குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் படிப்பில் எந்த வித இடையூறும் ஏற்பட்டு விட கூடாது எனவும் அறுவுறுத்தியுள்ளது.