ஏற்கனவே, சன் பிக்ச்சர்ஸ் விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அதேபோல ரஜினி - சிறுத்தை சிவா கூட்டணி படம் ஒருபக்கம், அதேபோல சூர்யா- பாண்டியராஜ் கூட்டணியில் படம், தனுஷ் - மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் படம், அடுத்ததாக ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படம் என வரிசையாக படம் தயாரித்துக்கொண்டிருப்பதால் இப்போது சிவகார்த்திகேயனும் சன்பிக்ச்சரிடம் 5 படங்களுக்கு கையெழுத்திட்டுள்ளனர். ஆக அஜித்தை தவிர மொத்த டாப் ஸ்டாரையும் வளைத்துவிட்டது சன் பிக்ச்சர்ஸ் குழுமம்.