OTT ரிலீசுக்கு தயாராகிறதா ராக்கி திரைப்படம்!? ரசிகர்கள் ஆர்வம்

OTT ரிலீசுக்கு தயாராகிறதா ராக்கி திரைப்படம்!? ரசிகர்கள் ஆர்வம்

வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராக்கி’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாச உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ‘தரமணி’ படத்தில் நடித்த வசந்த் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகின்றனர்.

 லாக்டவுன் காரணமாக ஓடிடி நோக்கி படையெடுக்கும் படங்களின் வரிசையில் ராக்கி திரைப்படமும் இணைந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.