சீதையாக நடிக்க 12 கோடி சம்பளம் கேட்கும் கரீனா கபூர்...

சீதையாக நடிக்க கரீனா கபூர் அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சீதையாக நடிக்க 12 கோடி சம்பளம் கேட்கும் கரீனா கபூர்...

பாகுபலிக்குப் வெற்றிக்கு பிறகு இதிகாசங்களை திரைப்படமாக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடியில் மகாபாரதத்தை எடுப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தான், இயக்குனர் தேசாய்க்கு, சீதையின் பார்வையில் ராமாயணத்தை எடுத்தால் என்ன என்று தோன்றி படத்தின் பெயரே சீதா தான் வைத்து அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

 

அப்போழுது சீதையாக நடிக்க கரீனா கபூரை அனுகியுள்ளார் தேசாய், திருமணம், குழந்தை என சினிமாவிலிருந்து ஒதுங்கி, அவ்வப்போது கௌரவ வேடத்தில் சினிமாவில் நடித்து வரும் கரீனா கபூரை அனுகியுள்ளார் இயக்குநர். அப்போழுது சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் கரீனா கபூர் சம்பளமாக கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கரீனா கபூருக்கு பதிலாக சீதா வேடத்தில் வேறு நடிகையை தேர்வு செய்யலாம் என்ற நோக்கில் தீவிரமாக தேடி வருகிறார் இயக்குநர் தேசாய்.