காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவங்க தான்!!!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவங்க தான்!!!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஆவார். இவர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தான் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியை இயக்குநர் சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.  

அதில் காளிதாஸ் ஜெயராம் தங்கம் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவான அந்த கதையில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்ததற்காக காளிதாஸ் ஜெயராம் பாராட்டப்பட்டார் . இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் காளிதாஸூடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்துக்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தை Rise East Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக போதை ஏறி புத்தி மாறி என்கிற திரைப்படத்தை தயாரித்து பின்னர் ஓடிடியில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிறுவனம் தற்போது காளிதாஸ் ஜெயராம் - கிருத்திகா உதயநிதிகூட்டணியிலான இந்த படத்தை தயாரிக்கிறது.