விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்த இந்தி நடிகர்... 

விஜய் சேதுபதியுடன் நடிப்பது பள்ளிக்கு போவது போல என்று நடிகர் கபீர் டுகான் சிங் புகழ்ந்துள்ளார். 

விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்த இந்தி நடிகர்... 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர் தான் விஜய் சேதுபதி.

தனது எதார்த்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்துவந்த விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு, இந்தி என்று எல்லைகளை கடந்து வசீகரிக்கத் தொடங்கியுள்ளார். 

ரசிகர்களை மட்டுமல்ல திரைப்பிரபலங்களையும் அட்மீர் செய்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. விஜய்சேதுபதி குறித்து பிரபல வில்லன் நடிகர் கபீர் டுகான் சிங் புகழ்ந்துள்ளார்.

அதில், விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் போன்றவர்களுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுவதாக கூறியிருப்பவர், அவர்களுடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போன்றது என்று புகழ்ந்துள்ளார்.

தமிழில் வேதாளம், காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன் போன்ற பல படங்களில் கபீர் டுகான் சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.