வெங்கட் பிரபுவின் நியூ மூவி அப்டேட் இதோ..!!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த புதிய படம் குறித்த  அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின்  நியூ மூவி அப்டேட் இதோ..!!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ படத்தை 
இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று 
வந்தது. ஆனால் லாக்டவுன் காரணமாக பணிகள் முடங்கியுள்ளது. 
விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெங்கட் பிரபு மாநாடு படத்தை அடுத்து, தான் இயக்கப் போகும் புதிய படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அவர் இயக்கும் 10-வது படம் இது. ‘Quickie’ என்ற தலைப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வெங்கட் பிரபுவின் ப்ளாக்டிக்கெட் கம்பெனி இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.