தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ரீலிஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ரீலிஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம், ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸில் ஜூன் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ள சூழலில், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் ஜூன் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.