சமந்தா நடிக்கும் படங்களுக்கு தடையா?

சமந்தா நடிக்கும் படங்களுக்கு தடையா?

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் குணசேகர் இயக்கத்தில் பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும்
 சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. 

இந்நிலையில், சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடி தெலுங்கில்  "ஏ மாய சேசாவே"  ஆட்டோ நகர் சூர்யா, மஜூலி, மனம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில்,கல்யாண கிருஷ்ணன் இயக்கும் "பங்கர்ராஜு" என்ற திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இதில் நாகார்ஜுனா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தென்னிந்திய நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா முதல்முறையாக பாலிவுட்டில் 'தி ஃபேமிலி மேன் 2'என்ற  வெப் சீரிஸ் மூலம் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினடிரைலரில் , சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. 

டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சமந்தாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த தொடரை தடை செய்யக்கோரியும் கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் தமிழில் சமந்தா நடித்து வரும் படங்களின் வெளியீட்டிலும் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது .