போலீசாரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி... சென்னையை மிரட்டிய பயங்கரம்!!

தென் சென்னையின் பிரபல ரவுடி சிடி மணியை காவல்துறையினர் சென்னையில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி... சென்னையை மிரட்டிய பயங்கரம்!!

சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) சிடி.மணி. தென்சென்னையின் பிரபல ரவுடியான இவரை சென்னையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல். எங்கு வைத்து கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களை காவல்துறை தெரிவிக்கவில்லை. ரவுடி சிடி மணி மீது 30 வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

8 கொலை வழக்கில் 2 கொலை வழக்கில் விடுதலையாகி விட்டார். 6 கொலை வழக்கு இருக்கிறது. 15 கொலை முயற்சி வழக்குகள், துப்பாக்கி வைத்திருந்ததாக 5 வழக்குகள் உள்பட 30 வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

2007, 2009, 2012, 2015ம் ஆண்டுகளில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குள்ளானார். கடந்த 2018-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சி. டி மணி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட அவர் திட்டம் தீட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை சி.டி மணி சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்ய அங்கு சென்றனர். அப்போது சி.டி மணி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டதில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவர் மீது குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தப்பியோட முயன்ற ரவுடி சி.டி மணியை தடுக்க தனிப்படைக் காவல் துறையினர் அவரது காலில் சுட்டுள்ளனர். இதனையடுத்து  சி.டி மணியை சுற்றி வளைத்து தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் காயமடைந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும், ரவுடி சி.டி மணியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.