2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு... 2 செல்போன்களும் சுவிட்ச் ஆப்!! தப்பியோடிய மணிகண்டன்... ராமநாதபுரத்திற்கு விரைந்து தனிப்படை!!

நடிகை சாந்தினியை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்ய வாய்ப்புள்ளதால், அவர் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு... 2 செல்போன்களும் சுவிட்ச் ஆப்!! தப்பியோடிய மணிகண்டன்... ராமநாதபுரத்திற்கு விரைந்து தனிப்படை!!

மலேசிய பெண்ணான நடிகை சாந்தினி முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கர்மாக்கினார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். நடிகை சாந்தினியின் புகாரை விசாரித்த போலீசார், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல்,323 - அடித்து காயம் ஏற்படுத்துதல்,417 - நம்பிக்கை மோசடி,376 - பாலியல் வன்கொடுமை,506 (1) - கொலை மிரட்டல்,67(a) - தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்ததையடுத்து மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய ராமநாதபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் 2 செல்போன் எண்கள் உள்ளன. நேற்று அதிகாலை முதலே அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மதுரை அண்ணாநகர் பகுதியிலும் அவருக்கு சொந்த வீடு உள்ளது. மாதத்தில் 10 நாட்கள் வரை, அவர் மதுரையில் உள்ள வீட்டில் தங்குவது வழக்கம். தற்போது மதுரையில் உள்ள வீடும் கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையில், மணிகண்டனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், நாகப்பட்டினத்தில் உள்ள நாகூரில் உள்ளனர் என்பதும், அவர்களுடன் கடைசியாக அவர் செல்போனில் பேசியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் நாகூரில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் நாகூர் சென்று, விசாரணை நடத்தவும் பிளான் செய்துள்ளனர்.