க்ரைம்
கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது மகனை அடித்து கொலை செய்த தாய்
ஐதராபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறு எனக் கருதி, பெற்ற தாயே 3 வயது மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஜீடிமேட்லா பகுதியில் கணவனை பிரிந்த நிலையில், தனது மூன்று வயது மகனுடன் உதயா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்த உதயா, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, மகனைக் கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், உதயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.