ஸ்டாலின் என்னை உள்ளே வைத்து விடுவார்,..அந்த பதவியை எனக்கு கொடுங்கள்.! எடப்பாடியிடம் கேட்ட விஜயபாஸ்கர்.!

ஸ்டாலின் என்னை உள்ளே வைத்து விடுவார்,..அந்த பதவியை எனக்கு கொடுங்கள்.! எடப்பாடியிடம் கேட்ட விஜயபாஸ்கர்.!

முதல்வர் வேட்பாளராவதில் தோல்வி, எதிர்க்கட்சி தலைவராவதில் தோல்வி என சமீபகாலமாக அரசியல் அரங்கில் தோல்விகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தவிர பன்னீர் செல்வத்துக்கு நம்பிக்கையாக இருந்த பலரும் சட்டமன்ற தேர்தலுக்கு பின் எடப்பாடியின் பின்னர் அணிவகுத்திருக்கின்றனர்.  

இந்நிலையில் பன்னீர்செல்வத்துக்கு  இருக்கிற ஒரே பிடிமானம், அவர் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பதுதான். ஒ.எடப்பாடிசெல்வமும் இதை வைத்துக்கொண்டு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று செயல்படுகிறார். என்ன தான் எடப்பாடி பல சந்தர்ப்பங்களில் பன்னீரை வீழ்த்தினாலும் மறுபடி மறுபடி அவரை சந்திக்க காரணம் பன்னீர் வசமிருக்கும் அந்த 

 ஒருங்கிணைப்பாளர் பதவி தான்.இதை வைத்தே எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பன்னீர் செல்வம். எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுத்ததும் அடுத்ததாக சட்டமன்றத்தில் வலிமைவாய்ந்த பதவியாக இருக்கும் கட்சி கொறடா பதவியை கைப்பற்ற முயன்று வருகிறாராம் பன்னீர். இந்த பதவியை அடைந்து விட்டால் சட்டமன்றத்தில் தன் பவர் அதிகரித்துவிடும் என்று நினைக்கிறாராம். 

ஆனால் அதே கொறடா பதவிக்கு கே.பி.முனுசாமியை கொண்டு வர நினைக்கிறார் எடப்பாடி என்று சொல்லப்படுகிறது. இதுவரை முனிசாமி பன்னீர், எடப்பாடி என இரண்டு பக்கமும் முழுமையாக வரவில்லை.  ஆகவே அவருக்கு கொறடா பதவியை கொடுத்து அவரை முழுவதுமாக தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறார் எடப்பாடி என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது. 

இது தவிர முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முயன்றுவருகிறார். கடந்த ஆட்சியின் போது கொரோனா முதல் அலையை சிறப்பாக கையாண்டதாக மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்ற அவர் தற்போது ஆட்சியை இழந்துள்ளதால் கட்சியில் முக்கிய பதவியை பெற துடித்து வருகிறாராம்.

இதற்கு அவர் கூறும் காரணமும் அதிமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதாவது கடந்த ஆட்சியில் குட்கா புகாரில் சிக்கி பதவியை இழக்கும் வரை சென்றவர் விஜயபாஸ்கர். அவரிடம் பேசி இவரிடம் பேசி ஒருவழியாக எப்படியோ தப்பி விட்டார். ஆனால் திமுகவின் ஊழல் புகார் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது விஜயபாஸ்கர் தானாம். ஆகவே வழக்கில் இருந்து தப்பிக்க எனக்கு நிச்சயம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி வேண்டும் என்று  தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று கூறுகிறார்கள். மேலும் தான் எடப்பாடி, பன்னீர் ஆகிய இருதரப்புக்கும் நான் பொதுவானவன் என்றும் கூறிவருகிறார் விஜயபாஸ்கர்.

அவரின் இந்த கோரிக்கைக்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் அவர் மேல் தொங்கும் ஊழல் வழக்கே அவருக்கு எதிராக இருக்கிறதாம். அதாவது சட்டமன்றத்தின் முக்கிய பதவியான எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை இவருக்கு கொடுத்த பின் இவர் ஊழல் வழக்கில் கைதானால் அது இந்திய அளவில் கட்சியின் பெயரை மிகவும் பாதித்து விடும் என்றும், அதன் பின் கட்சியின் பெயரை சரி செய்யவே பல மாதங்கள் ஆகும் என்று அதிமுக தலைமை யோசித்துவருகிறது என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.