மகேந்திரனுக்காக போட்டிப்போடும் மூன்று கட்சிகள்,.. தட்டித் தூக்கப்போவது யார்? 

மகேந்திரனுக்காக போட்டிப்போடும் மூன்று கட்சிகள்,.. தட்டித் தூக்கப்போவது யார்? 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யத்தில் கமலுக்கு பிறகு அதிக வாக்குகள் பெற்ற நபராகவும் இருந்தார்.

நிலைமை இப்படி இருக்க, தேர்தலுக்கு பிறகு திடிரென்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அதற்கான கடிதத்தையும் கொடுத்தார். மேலும் கமல்ஹாசன் மீது விமர்சனங்களையும் வைத்தார். அவரின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து நீக்கப்படவேண்டிய களை என கமல்ஹாசனும் மகேந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த சம்பவத்துக்குப் பிறகு மஹேந்திரன் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவின. மேலும் கொங்கு மண்டலத்தில் வலிமையான திமுக முகங்கள் இல்லாததால் மகேந்திரனை திமுகவின் கொங்கு முகமாக மாற்ற திமுகவும் விரும்பியதாக சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து மகேந்திரனுக்கு பாஜக மற்றும் அதிமுக சார்பில் தூது விட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் மகேந்திரன் நாளை தமிழகத்தின் முக்கிய கட்சியில் இணைவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அது தொடர்பான அறிவிப்பை அவர் இன்றே வெளியிட வாய்ப்பிருப்பதாவும் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. பெரும்பாலும் அவரது முதல் முடிவாக திமுக இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.