ஆப்பிரிக்காவிலிருந்து கடலில் நீச்சலடித்து ஐரோப்பா வந்த அகதி,. கட்டி அணைத்து தண்ணீர் கொடுத்த பெண்,. இணையத்தை கலக்கும் புகைப்படம்.!

ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு நீச்சல் அடித்து வந்த அகதியை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் அணைத்து அவருக்கு தண்ணீர் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் அமைந்துள்ள மேற்கு சஹாரா பகுதியை தனிநாடு கேட்டு பொலிசரியோ முன்னணி என்ற அமைப்பு போராடி வருகிறது. அந்த அமைப்பின் தலைவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. ஆனால் அவருக்கு உரிய சிகிச்சைகளை ஏற்படுத்த மொரோக்கோ அரசு மறுத்து வருகிறது. ஆகவே அவர் ஸ்பெயினுக்கு சிகிச்சைக்காக செல்ல விரும்பினார். இதற்கு ஸ்பெயின் ஒப்புக்கொண்டாலும் மொரோக்கா மறுத்துள்ளது. இந்த பிரச்சனை ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ இடையே சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனால் தங்கள் நாட்டு வழியாக ஸ்பெயின் செல்லும் அகதிகளை மொரோக்கா அரசு தடுக்காமல் இருந்துள்ளது. இதனால் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பா செல்லவிரும்பும் அகதிகள் மொரோக்கோ வழியாக கடலில் நீச்சல் அடித்து ஸ்பெயின் சென்று வருகிறார்கள். மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் இடையே 15 கிலோமீட்டர் தொலைவுக்கு நீச்சல் அடித்து செல்வதாக கூறப்படுகிறது. இன்னும் செல்லும் அகதிகள் பலர் கடலில் மூழ்கி இறந்துவிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படி நீச்சல் அடித்துச்சென்ற அகதி ஒருவர் ஸ்பெயின் கடற்கரை பகுதியில் ஒதுங்கியுள்ளார். இந்த பயணத்தால் கடும் சோர்வு அடைந்த அவர் கண்களை கூட திறக்க முடியாமல் சுருண்டு கிடந்துள்ளார். இதனைக் கண்ட ஸ்பெயின் தன்னார்வ அமைப்பை சேர்ந்த பெண் உடனே அந்த அகதியை ஓடிச்சென்று கட்டி அணைத்து அவரை தாங்கிக்கொண்டார். பின் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அந்த அகதியின் கண்களில் கண்ணீர் வழிந்துள்ளது. இதை அங்கிருந்தவர் புகைப்படமாக எடுக்க இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்பிரிக்காவிலிருந்து கடலில் நீச்சலடித்து ஐரோப்பா வந்த அகதி,. கட்டி அணைத்து தண்ணீர் கொடுத்த பெண்,. இணையத்தை கலக்கும் புகைப்படம்.!