இளம் பெண்கள், மாணவிகளை சீரழித்த கொடுமை!! காமச் சாமியார்கள் சிவசங்கர் செய்த பாலியல் வக்கிரங்கள்...

இளம் பெண்கள், மாணவிகளை சீரழித்த கொடுமை!! காமச் சாமியார்கள் சிவசங்கர் செய்த பாலியல் வக்கிரங்கள்...

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி. இந்த பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஆவார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த பிழைப்புதேடி சென்னைக்கு வந்த நிலையில் அங்கு சிறு சிறு வேலைகளை செய்து பின்னர் ஆன்மிக சொற்பொழிவுகளில் ஈடுபட்டு தன்னை ஒரு சாமியாராக மாற்றியது மட்டுமின்றி பெயரையும் சிவசங்கர் பாபா என மாற்றிக்கொண்டார். 


பின்னர் படிப்படியாக முன்னேறிய அவர், கேளம்பாக்கத்தில் 64 ஏக்கரின் பிரம்மாண்ட பள்ளி ஒன்றை கட்டினார். அதில் குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வியை வழங்கினார். இதனால் அப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் திரண்டனர். 


பள்ளி வளாகத்தில் ஊஞ்சலில் அமர்ந்தபடி தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடத்துவார் பாபா, அதில் தன்னை கடவுள் என்றும் நான்தான் கிருஷ்ணர், சிவன் என்றும் கூறுவாராம். மேலும் ஒருபடி மேல சென்று விரைவில் சூரியனில் ஐக்கியமாகப் போகிறேன் என்றும் கூறி அதிரடி காட்டி வந்துள்ளார். அவ்வபோது அங்கிருக்கும் பெண்களையும் மாணவிகளையும் கடவுள் அருள் என்று கட்டிப்பிடிக்கும் சம்பவமும் அரங்கேறுமாம்.


இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவிகளை குறிவைத்தும், மன தைரியம் இல்லாத பிள்ளைகளையும் குறிவைத்து அவர்களை தனியாக அழைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாட்டு மாணவிகளையும் விட்டுவைக்காத அவர், அவர்களிடம் தன்னுடையை லீலைகளை  காண்பித்துள்ளார்.

இதற்கு சில ஆசிரியர்களும் உடந்தை என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக இருக்கிறது. 
எனினும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துவிட்டால் போதும், உடனடியாக அந்த மாணவிக்கு டி.சி கொடுத்து அனுப்பப்படுவார். மேலும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் லோக்கல் எஸ்.ஐ முதல் எஸ்.பி வரை லஞ்சம் கொடுத்து விவகாரத்தை அப்படியே அமுக்கிவிடுவார் என்கின்றனர் தற்போது புகார் அளித்துள்ள பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள். 

எனவே இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபாவை தொடர்பு கொள்ள சென்றால் அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டார் என்ற தகவல்தான் கிடைக்கிறது. கடவுள் என்ற பெயரில் இளம் மாணவிகளின் வாழ்கையை சீரழித்துவரும் காமச் சாமியார்கள் நிர்வாகத்தில் உள்ள இதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசே நடத்தி பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கதறுகின்றனர்.

முதற்கட்டமாக இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் அடுத்தகட்டமாக அவர்களின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதேபோன்று சிவசங்கர் பாபாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.