ஒரே ஆண்டில் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து  271.5 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக.. படுமோசமான நிலையில் காங்கிரஸ்.! 

ஒரே ஆண்டில் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து  271.5 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக.. படுமோசமான நிலையில் காங்கிரஸ்.! 

முன்பெல்லாம் உண்டியல் வைத்து,கட்சி உறுப்பினர்களிடம் நன்கொடை வாங்குவது என்று இருந்த காலம் போய், தற்போது தொழிலதிபர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை வாங்குவது என்ற அளவில் கட்சிகள் இருக்கின்றன.

பொதுவாக தேர்தல் காலங்களில் கார்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு வாரி இறைக்கும். அதிலும் தற்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நிதிகளுக்கு எந்த கணக்கையும் காட்டவேண்டாம் என்றும், நிறுவனங்கள் யாருக்கு நன்கொடை கொடுத்தது என்றும் கூறவேண்டாம் என்ற வசதி இருப்பதால் கார்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமே கட்சிகளுக்கு நிதி கொடுக்கின்றன.  

இந்நிலையில், 2019/2020ம் ஆண்டில் கட்சிகள் பெற்ற நிதிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த விவரத்தின் படி பிற கட்சிகளை விட அதிகமாக 276. 45 கோடி ரூபாயை நன்கொடையாகப் பாஜக பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி  682 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு காங்கிரஸ் பெற்ற நன்கொடையை விட 25% குறைவாகும்.


மேலும் மாநில கட்சிகளான டிஆர்எஸ் ரூ 130 கோடியையும் , சிவசேனா ரூ 111 கோடியையும் , ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ 92 கோடியையும் , அதிமுக ரூ 89 கோடியையும் , திமுக ரூ 64 கோடியையும் , ஆம்ஆத்மி ரூ 49 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.